• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, November 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன.

Mathavi by Mathavi
August 15, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன.
Share on FacebookShare on Twitter

வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலேதான் தமிழர்கள் முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே கிழக்கு மாகாணத்தை அபகரிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கல்லோயாக் குடியேற்றத்தினைக் கொண்டு வந்தார்கள். 1921ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் அடிப்படையில் வெறுமனே நூற்றுக்கணக்கிலேயே சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தர்கள். ஆனால் இன்று 25 வீதத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதம் கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்ய வேண்டும். இதனையும் சிங்கள மாகாணமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டிருந்தாலும் 1983 காலகட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலே தான் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன.

எங்களுக்குள் இருக்கும் சிலரையும். முஸ்லிம் ஊர்காவற்படையினரையும் கனகட்சிதமாகப் பயன்படுத்தி இரண்டு இனங்களுக்குமிடையில் விரோதங்களைக் கொண்டு வரும் போது தான் எங்களுடைய சகோதர இனமான முஸ்லிம்கள் தாங்கள் இந்தப் பிரதேசத்திலே குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை தங்களது பிரதேசமாகக் கருத வேண்டும். தங்களது பிரதேசமாக எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பல தமிழ் கிராமங்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தின் உதவியுடன் பல திட்டமிட்ட படுகொலைகளை இன அழிப்புகளை, கிராமங்களை இல்லாதொழிக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அதில் பெரியதொரு வேலைத்திட்டமே மட்டக்களப்பு, அம்பாறை பிராந்தியத்திலே பலம்பெரும் கிராமமான இந்த வீரமுனைக் கிராமத்தை இல்லாதொழித்தல், அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக இந்த சம்மாந்துறைப் பகுதியில் எந்தவொரு தமிழ் அடையாளத்தையும் இல்லாமலாக்கி விடலாம் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட செயலாகவே இதனை நான் கருதுகின்றேன்.

அந்தக் காலகட்டத்திலே இந்த மக்களை மீண்டும் இந்தக் கிராமத்திற்குக் கொண்டு வருவதற்கு நான் முயற்சித்ததற்காக என்னையும் இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து இல்லாதொழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிந்தேன். அது முடியால் போக தங்களது வஞ்சகத்தினைத் தீர்ப்பதற்காக தங்களது கிராமம் சம்பந்தமாக ஒரு புத்தகத்தில் என்னை இஸ்லாமிய இனத்தின் விரோதியாகச் சித்தரித்து வெளியிட்டிருந்தார்கள்.

இன்று இந்த செம்மணி போன்ற இடங்களிலே பல புதைகுழிகள் தோண்டப்படும் போது அம்பாறை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் கண்முன்னே நடமாடித் திரிகின்றார்கள். இதற்கான சாட்சிகளும் இருக்கின்றன. இவைகளை வெளிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அது மாத்திரமல்ல இந்த வரலாறுகளை நாங்கள் மன்னித்தாலும் மறக்காமல் இருக்கின்றோம். கடந்த பல தசாப்தகாலங்களாக நாங்கள் எங்கள் விடுதலையை வேண்டிப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எமது போராட்ட வடிவங்கள் மாறலாம், எமது தேவைகளும் மாறியிருக்கலாம். ஏனெனில் நாங்கள் எல்லாம் தனிநாடு வேண்டும் என்று போராடியவர்கள் ஆனால் இன்று அது சுருங்கிச் சுருங்கி இணைந்த வடக்கு கிழக்கு கூட எமக்குக் கிடைக்காது என்ற காலகட்டத்திலே இருக்கின்ற மாகாணசபை அதிகாரத்தையாவது முழுமையாகப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே இருக்கும் நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

எமது கிழக்கு மாகாணத்திலே யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது, இன ஒற்றமை வேண்டும் என்று சொல்லும் அரசியல்வாதிகள், குறிப்பாக நேற்றுப் பெய்த மழையில் முளைத்தவர்கள், கடந்த கால வரலாறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாது விட்டால் ஏனையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இழந்தவர்கள் நாங்கள், உங்களுக்கு அந்த இழப்புகள் தெரியாது. இங்கு நடந்த படுகொலைகளைக் கண்ணால் கண்டவர்கள் இருக்கின்றார்கள். தங்களது சிறு வயதுகளிலே அவற்றைப் பார்த்தவர்களுக்கு அந்த மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்து இந்த இன ஒற்றுமை சம்பந்தமாகக் கதைக்க வேண்டும்.

இன ஒற்றுமை சம்மந்தமாக நாங்கள் கதைக்கின்றோம். எங்களுக்குத் தீர்வு வேண்டும், நாங்கள் அரசியல் செய்ய வேண்டும், உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க வேண்டும். ஆனால் இங்கு பல பிரச்சனைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலே கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தொடர்பில் பேச முடியாதா? சபைகளை அமைத்து அதிகாரத்தைப் பெறும் நாங்கள் அந்த மக்கள் படும் துன்பங்களைக் களைய முடியாதா? என்பதைச் சிந்தித்து எதிர்காலத்திலே எவ்வாறு இன ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, ஒருதலைப் பட்சமாக எந்த முடிவுகளும் எடுக்காமல் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

எங்களது தேவை, எங்களுக்குக் கிடைக்க வேண்டிய தீர்வுகள் எங்களது ஒற்றுமையின் மூலமாகவே கிடைக்குமே தவிர வேறு யாருடனும் சேர்ந்து பெற முடியாது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் நாம் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும். அதற்கு எந்த விட்டுக் கொடுப்புக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

என்றோ ஒரு நாள் மரணம் என்ற கோட்பாட்டிலேயே நாங்கள் போராடச் சென்றவர்கள். எமது மக்களுக்காக எதற்கும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். எனவே எங்களுடைய ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். நாங்கள் ஒன்றாகப் பயணித்தால் மட்டுமே இவ்வாறான விடயங்களுக்கு நாங்கள் ஒரு தீர்வினைக் காணலாம், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறாமல் இருக்க நாங்கள் உரிமையுடன் எமது பிரதேசங்களிலும் வாழலாம் என்று தெரிவித்தார்.

Related Posts

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

அநுர அரசின் பயணம் சிறப்பு.!

by Mathavi
November 13, 2025
0

"இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

by Thamil
November 12, 2025
0

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச...

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது!

by Thamil
November 12, 2025
0

"தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று (12)...

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சாதகமான நிலை!

by Thamil
November 12, 2025
0

'தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் உண்மைகளாகயிருந்து சிறுபான்மை இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கும்போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்'...

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

சட்டத்தால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது!

by Thamil
November 12, 2025
0

'சட்டத்தை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மாற்ற முடியாத நிலையில் ஒரு சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதற்கு ஆவண காப்பகம் முக்கியமானது' என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல்...

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்!

by Thamil
November 12, 2025
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், மற்றையவரிடமிருந்து...

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம்!

by Thamil
November 12, 2025
0

"இலங்கையில் பொறுப்புக்கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம், சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம்" என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த...

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

வவுனியா – பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை உடன் தவிர்க்கவும்!

by Thamil
November 12, 2025
0

பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு...

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவம், பொலிஸ் ஈடுபடவில்லையாம்!

by Thamil
November 12, 2025
0

"வடக்கு மாகாணத்தில் போதைப்பொருட்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

மீண்டும் பாரிய கடலரிப்பில் சிக்கித் தவிக்கும் திருக்கோவில் பிரதேசம்!

by Thamil
November 12, 2025
0

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சமகாலத்தில் சந்தித்து வருகின்றது. அதனால் 7 ஆயிரம் கரையோர குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி