1914
அமெரிக்கக் கட்டடக் கலைஞர் பிராங்க் லாய்டு ரைட்டின் பணியாள் ஏழு பேரைக் கொலை செய்து, ரைட்டின் விஸ்கொன்சின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினான்.
1914
பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
1914
முதலாம் உலகப் போர்: முதலாவது ரஷ்ய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது.
1920
வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
1939
போலந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 26 போர் வானூர்திகளில் 13 தரையில் மோதி எரிந்து அழிந்தன.
1940
கிரேக்க – இத்தாலியப் போர்: இத்தாலிய நீர்மூழ்கி ஒன்று கிரேக்கக் கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது.
1941
யோசெப் யாக்கோப்சு என்ற ஆங்கிலேய இராணுவ வீரர் உளவு நடவடிக்கைகளுக்காக இலண்டன் கோபுரத்தில் வைத்து சுடப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
1944
இரண்டாம் உலகப் போர்: டிராகூன் நடவடிக்கை: கூட்டுப் படைகள் தெற்கு பிரான்சில் தரையிறங்கின.
1945
இரண்டாம் உலகப் போர்: பேரரசர் இறோகித்தோ ஜப்பான் சரணடைந்ததையும், கொரியா ஜப்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றதையும் அறிவித்தார்.
1947
இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
1947
முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.
1948
கொரியக் குடியரசு உருவானது.
1950
அசாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் உயிரிழந்தனர்.
1954
அல்பிரெடோ ஸ்ட்ரோசுனர் தனது கொடுங்கோலாட்சியை பரகுவையில் ஆரம்பித்தான்.
1960
கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963
இஸ்க்கொட்லாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1963
மூன்று நாள் கிளர்ச்சியை அடுத்து கொங்கோ குடியரசின் அரசுத்தலைவர் புல்பர்ட் யூலோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
1971
பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1973
வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
1974
தென் கொரியாவின் அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ மீதான கொலை முயற்சி ஒன்றின் போது முதல் சீமாட்டி யூக் யுங்-சூ கொல்லப்பட்டார்.
1975
வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
1977
ஒகைய்யோ பல்கலைக்கழகத்தினால் இயக்கப்பட்ட பிக் இயர் என்ற வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஈர்ப்பிலா வெளியில் இருந்து வானொலி சமிக்கை ஒன்றைப் பெற்றது. இந்நிகழ்வு “வாவ்! சமிக்ஞை” என அழைக்கப்பட்டது.
1984
துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி துருக்கிய இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது.
1998
பிரித்தானியாவில் வட அயர்லாந்து, ஓமா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர், 220 பேர் காயமடைந்தனர்.
2005
காசாக்கரையில் இருந்தும், மேற்குக் கரையின் வடக்கேயுள்ள நான்கு இஸ்ரேலியக் குடியேற்றங்களிலும் இருந்து இஸ்ரேலியரை வெளியேற்றும் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
2005
இந்தோனேசிய அரசுக்கும் அச்சே விடுதலை இயக்கத்துக்கும் இடையே 30ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எல்சிங்கியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
2007
பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.
2013
ஒலிங்கிட்டோ என்ற புதிய புலாலுண்ணும் மிருக இனத்தை அமெரிக்கக் கண்டத்தில் கண்டுபிடித்திருப்பதாக சிமித்சோனிய நிறுவனம் அறிவித்தது.
2015
வட கொரியா தனது நேரத்தை அரை மணி நேரம் பின்னோக்கி நகர்த்தியது. இது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 8½ மணி முன்னோக்கியதாகும்.















