சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அரசு வாகனத்தில் நடிகை நிதி அகர்வால் சென்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதில் தனது தவறு எதுவும் இல்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இந்தக் காரை ஏற்பாடு செய்தார்கள் என்றும், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் நிதி அகர்வால் விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது நிதி அகர்வால் எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் தனது சொந்த காரிலேயே சென்று வருகிறாராம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்து தரும் கார்களில் அவர் ஏறுவதே கிடையாதாம்.
இது குறித்து நண்பர்கள் கேட்டபோது, “நமக்கு நேரம் சரியில்லை. எனவே புதிதாக எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனால் இப்போது மிகவும் உஷாராக இருக்கிறேன்” என்று புலம்பினாராம்.
‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில் நடிகரும், துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் ஜோடியாக நடித்ததில் இருந்து நிதி அகர்வால் மீது விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.










