வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் கலை பண்பாட்டு விழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி பிரதேச செயலாளர் கலாஞ்சனி அருண சாந்தா தலைமையில் பிரதேச கலை இலக்கிய விழா இடம்பெற்றுள்ளது.
இதன் போது வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய கலை இலக்கிய விழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாரம்பரிய கலைகளாக காத்தவராயன் கூத்து, சிந்து நடைக் கூத்து, கோலாட்டம், நடனங்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது
அத்துடன், கலைஞர்களும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. சரத் சந்திரா கலந்துகொண்டு நினைவுச் சின்னமும் சான்றிதலும் வழங்கி கௌரவித்துள்ளார்.
இந் நிகழ்வுக்கு வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா, கமலதாசன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஷ்ணவேணி, வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன், வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.திருலிங்கநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

























