சீதுவ, எரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களும் அதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று வியாழக்கிழமை(14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் சீதுவ பகுதியைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27 மற்றும் 44 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் வைத்து இந்தக் குழு கைது செய்யப்பட்டதோடு, சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று வெள்ளிக்கிழமை (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி இரவு எரியகஹலிந்த பகுதியில் ஒரு குழுவினரால் கூரிய ஆயுதங்களால் தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த 40 வயதுடைய நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
இளங்குமரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஒரு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்கு வெளியில் பகிரங்கமாக தெரிவித்த சில கருத்துக்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை தேசிய மக்கள் சக்தியின்...
யாழில் ஹாட்லி மைந்தர்களின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!
ஹாட்லி மைந்தர்களின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை - இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களால் நேற்று (17) திங்கட்கிழமை...
அநுராதபுரத்தில் “ஜனனி” வேலைத்திட்டத்தின் இரண்டாவது செயலமர்வு!
"ஜனனி" வேலைத்திட்டத்தின் அநுராதபுரம் மாவட்டத்தின் இரண்டாவது செயலமர்வானது, 13.11.2025 திகதியன்று “திலகா சிட்டி” விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில், அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு அரசியல்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...
மாணவியை துஷ் – பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!
மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை...
‘பொது வளங்களை முகாமைத்துவம் செய்தல்’ திட்டம் ஆரம்பித்து வைப்பு!
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்து இடங்களில் 'பொது வளங்கள் முகாமைத்துவம் செய்தல்' திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள்...
மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில் கரையொதுங்கும் நிலையில் மன்னார் கடற்கரையோரங்களிலும் தற்போது கரையொதுங்கி...
மட்டக்களப்பில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ள நீர்வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தல்.!
கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம்...
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச...
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு.!
சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (17) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 05...










