உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். ரஷ்ய அதிபர் புடினுடன், அதிபர் ட்ரம்ப் இன்று (15) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அதிபர் புடின் சமாதானம் செய்வார், அதிபர் ஜெலன்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன்.
புடினுடனான இது ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை.
நாங்கள் இராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். அதில் 100 சதவீதம் நேட்டோவால் செலுத்துகிறோம்.
நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களை தீர்த்துவிட்டேன். இந்தியா – பாகிஸ்தான் போரில் 6 – 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன. நாங்கள் அதைத் தீர்த்து வைத்தோம்.
நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் – ரஷ்யா போர் ஒருபோதும் நடந்திருக்காது” என மீண்டும் தெரிவித்தார்.










