1958
தமிழ் மொழி (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2006
செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல்: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டர். 60 பேர் படுகாயமடைந்தனர்.
1814
சுவீடன் – நோர்வே போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1816
டிரிசுதான் டா குன்ஃகா தீவுக் கூட்டம் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்காவில் கேப் காலனியில் இருந்து இது நிர்வகிக்கப்பட்டது.
1842
அமெரிக்காவில் செமினோலே பழங்குடியினர் புளோரிடாவில் இருந்து ஓக்லகோமாவுக்கு விரட்டப்பட்டனர். இரண்டாவது செமினோலே போர் முடிவுக்கு வந்தது.
1880
1248 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோல்ன் கதீட்ரல் செருமனியின் கோல்ன் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.
1888
ஆங்கிலேய இசையமைப்பாளர் ஆர்த்தர் சலிவனின் த லொஸ்ட் கோர்ட் என்ற ஒலிப்பதிவு லண்டனில் தாமசு அல்வா எடிசனின் கிராமபோன் அறிமுக நிகழ்வில் இசைக்கப்பட்டது.
1893
வாகனப் பதிவை பிரான்சு உலகில் முதல் நாடாக அமுல்படுத்தியது.
1900
ஜப்பான், ரஷ்யா, பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, ஆத்திரியா – அங்கேரி ஆகிய எட்டு நாடுகள் இணைந்து சீனாவின் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
1912
நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் அந்நாட்டை முற்றுகையிட்டது.
1916
முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆத்திரியா – அங்கேரி மீது போரை ஆரம்பித்தது.
1921
தன்னு உரியாங்காலி என்ற புதிய நாடு (பின்னர் துவான் மக்கள் குடியரசு) உருவாக்கப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
1936
ஐக்கிய அமெரிக்காவில் கடைசித் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1937
இரண்டாம் சீன – ஜப்பானியப் போர் : ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1945
வியட் மின் படைகள் ஆகஸ்ட் புரட்சியை ஆரம்பித்தன.
1945
இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு ஜப்பான் சரணடைய ஒப்புக் கொண்டது. பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
1947
பாகிஸ்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
1969
வட அயர்லாந்துக்கு பிரித்தானிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 37 ஆண்டுகள் இராணுவம் அங்கு நிலைகொண்டிருந்தது.
1971
பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1972
கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர்.
1980
போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2005
சைப்பிரசில் இருந்து பிராகா நோக்கிச் சென்ற விமானம் கிரேக்கத்தில் மலைகளில் மோதியதில் 121 பேர் உயிரிழந்தனர்.
2007
ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2013
எகிப்தில் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு அவசரகால நிலையைப் பிறப்பித்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2015
கியூபாவில் அவானா நகரில் 54 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்தது.
2018
இத்தாலி, செனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
















