74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச்சிறிய பாலூட்டியின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு சிறிய பாலூட்டி உயிரினத்தின் உடற் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கடைவாய்ப்பல் உட்பட தாடை எலும்பின் ஒரு பகுதியாக இருக்கும் புதைபடிவம் கிடைத்துள்ளது.
சிலியின் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில் விஞ்ஞானிகள் புதைபடிவத்தைக் கண்டுபிடித்தனர்.
சிலி பல்கலைக்கழகம் மற்றும் சிலியில் உள்ள மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த விலங்குகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது எலியை விட சிறிய பாலூட்டியாகும்.
இது பிளாட்டிபஸைப் போன்ற முட்டையிடும் உயிரினம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இல்லாவிடில் கங்காருவைப் போல அதன் குட்டிகளை அதன் உடலின் ஒரு பை போன்ற பகுதியில் வைத்திருக்கும் ஒரு விலங்காக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன் பற்ககளை வைத்துப் பார்த்தால், இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் ஒரு விலங்கு என்பதை அறியமுடிகிறது.










