முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம் ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப் பகுதியில் 14.08.2025 இன்று காலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு, சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
நிகழ்வில் உயிரிழந்த பிள்ளைகளின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன், முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜுவராசா சமூக செயற்பாட்டாளர் த.யோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















