மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாள். யாராலும் முடிக்க முடியாத வேலைகளை கூட நீங்கள் சுலபமாக செய்து முடித்துவிட்டு, நல்ல பெயரை வாங்கிக் கொள்வீர்கள். மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வெற்றி மேல் வெற்றிகள் வந்து குவியும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற ஒரு பதட்டம் உங்களிடம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய மாட்டீர்கள். புது முடிவுகளை உடனடியாக எடுக்க மாட்டீர்கள். வெறும் யோசனையிலேயே இந்த நாள் நகர்ந்து சென்றுவிடும். இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். இறைவனின் மீது பாரத்தை போட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பெரிதாக எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. விடுமுறை நாள் என்பதால், நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் சந்தோசமாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் ஜாக்கிரதையா இருங்கள். தகுதிக்கு மீறி செலவு செய்யாதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் கிடைக்கூடிய நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல், உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப சண்டைகள் சரியாகும். உங்களுடைய நேரம் இன்று சந்தோஷமாக நகர்ந்து செல்லும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட முன் கோபம் வரும். வாக்குவாதம் சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கைநிறைய இலாபம் கிடைக்கும் நாள். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. வாராத கடன் வசூல் ஆகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இதுநாள் வரை முடிக்கவே முடியாத, பிரச்சினைக்கு உண்டான தீர்வு இந்த நாளில் கிடைக்கும். முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட தூரப் பயணங்கள் நன்மையை செய்யும் மன நிம்மதி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரமும் வேலையும் எப்போதும் போல செல்லும் பிரச்சினைகள் இருக்காது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்தில் இருந்து வெளிவரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயற்படுவீர்கள். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்களுடைய வேலைகளை எல்லாம் சரியான நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். இதனால் இந்த வாரம் முழுவதுமே உங்களுக்கு நன்மை நடக்கும். இந்த நாளை இனிய நாளாக அமைத்து தந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும். தேவையற்ற செலவுகள் குறையும். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானம் தேவை. வாடிக்கையாளரிடம் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளக் கூடாது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும்.



