• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாயின் அரசின் இறுதித் தருணம் இதுதான்..!

admin by admin
August 9, 2025
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
இளைஞனின் உயிரிழப்பிற்கு இராணுவம் காரணமாயின் அரசின் இறுதித் தருணம் இதுதான்..!
Share on FacebookShare on Twitter

யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்த காலம் முடிந்தும் இலங்கை இராணுவத்தினரது ஒருசில நடத்தைகளும், செயற்பாடுகளும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் அமுலில் வைத்திருப்பது என்பது இன்னமும் தமிழர்கள் மீது ஆக்கிரமிப்பு கொள்வது போல் உள்ளது என்பது மிகவும் வேதனைக்குறியதும், கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு குளத்தில் இளைஞனது சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனின் ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு பகுதியில் இலங்கை இராணுவம் வெளியேறும் பகுதியில் உள்ள பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக ஐந்து இளைஞர்களை அழைத்த இராணுவம், குறித்த முகாம் அமைந்திருந்த பகுதியில் வைத்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும், அதிலிருந்து 4 இளைஞர்கள் தப்பியோடியதாகவும், ஒருவர் மாத்திரம் வெளிவரவில்லை எனவும், குறித்த நபருடைய சடலமே குளத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும், அவர்களது உறவினர்கள் மற்றும் ஊடகங்களூடாக செய்திகளை காணமுடிந்தது.

குறித்த இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவமே காரணமாக இருப்பின் இது வண்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இலங்கையின் தற்போதைய அரசு தங்களை ஒரு விடிவெள்ளிபோலும், இன, மத, பேதமின்றி சகல மக்களுக்குமான நீதியான அரசை கட்டியெழுப்புவோம் எனக்கூறி, அதை நம்பி வாக்களித்து வென்ற இந்த அரசாங்கம் இன்றுவரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இன்னமும் அகற்றாமல், ஒரு அரசியல் கைதியையேனும் விடுவிக்காமல், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு எந்த ஓரு ஆறுதலைக் கூட வழங்க முடியாத இந்த அரசாங்கம் மீது இப்போது அவநம்பிக்கை மக்கள் மத்தியில் பரவிவருகிறது.

இலங்கை அரசு என்பது எப்போதும் தமிழர்களுக்கான நீதியை வழங்காது என்பது எமது கண்முன் புலப்படுகிறது. கடந்த காலங்களில் எனது கட்சியும் அரசாங்க சர்பாக இருந்திருப்பினும், அரசு தமிழர்களுக்கு எதிராக செயற்படும்போது அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்கள் என்பதை இங்கு பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேவேளை குறித்த இளைஞனின் மரணத்திற்கு இலங்கை இராணுவம் காரணமாக இருப்பின், வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பூமியில் உள்ள, தமிழ் பேசும் மக்கள் மாத்திரம் அல்ல, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தமிழ் பேசும் உறவுகளும், இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நிச்சயம் ஜனநாயக ரீதியில் மாபெரும் எழுச்சிப் போராட்டத்தை ஆரம்பிக்கும் என்பதை இந்த அரசிற்கு ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

Related Posts

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

by Mathavi
June 7, 2026
0

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற...

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக...

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

by Mathavi
June 7, 2026
0

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

by Mathavi
June 7, 2026
0

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!

by Mathavi
June 7, 2026
0

அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (6)...

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது.!

by Mathavi
June 7, 2026
0

ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம - பனாகொட வீதியில் நேற்று (06) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கணவனை கொ*லை செய்த மனைவி.!

by Mathavi
June 7, 2026
0

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய...

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

by Mathavi
June 7, 2026
0

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
June 7, 2026
0

கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி