நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – பதுளை வீதியில் மற்றும் நகர் புறங்களில் சுற்றித் திரியும் மட்டக் குதிரைகள் பிடிக்கும் நடவடிகைகள் நடைபெற்று வருகின்றது.
நுவரெலியா நகரில் சுற்றித் திரியும் மட்டக் குதிரைகள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான உணவு மற்றும் புற்கள் அனைத்தும் நகர சபை ஊழியர்கள் மூலம் பல சிரமத்தின் மத்தியில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 25 க்கு மேற்பட்ட குதிரைகள் உள்ளதாகவும் அதில் 15 குதிரைகள் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு சில குதிரைகள் கட்டப்பட்டிருந்த கயிற்றினை அறுந்து கொண்டு சென்றுள்ளது. இதனால் நகர் புறங்களில் சுற்றி திரியும் அனைத்து மட்டக் குதிரைகளும் பிடித்து கட்டப்படும் பணியில் நகரசபை ஊழியர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு இன்றி குதிரைகளை பிடிக்கும் நடவடிக்கையை நுவரெலியா நகர சபை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













