தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியர் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதில் தம்பலகாமம் பிரதேச சபைத் தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜயகுமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விஜயம் நேற்று (01) இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இங்கு தேவையாகவுள்ள பிண அறை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டதற்கிணங்க அதனை கருத்திற் கொண்டு தரம் C யில் உள்ள இவ்வைத்தியசாலையின் பல வசதிகளின் தேவை தொடர்பில் பலராலும் முன்வைக்கப்படுகின்றது.
அந்த அடிப்படையில் இதனை எதிர்காலத்தில் நிவர்த்திக்க அரசின் முயற்சிகளோடும் தனியார் துறை நிறுவனங்களின் ஒத்துழைப்போடும் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு விஜயம் செய்வதாக உறுதியளித்துள்ளார். மிக விரைவில் குறைபாடுகள் உள்ள விடயங்களை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவிக்கப்பட்டது.












