• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.!

Mathavi by Mathavi
July 23, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் திருமதி துவாரகா ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சபையின் மாதாந்த அமர்வு இன்று (23) சபையின் சுழிபுரத்தில் உள்ள சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இவ்விடயம் குறித்து சபையில் முன்மொழிவொன்றை சமர்ப்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் –

இப்பகுதியில் நீர் வழிந்தோட வடிகால் இருந்தும் உரிய திட்டமிடலோ முறையான பொறிமுறையோ இல்லாது அமைக்கப்பட்டுள்ள வடிகாலால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஏற்படும் வெள்ள நீரால் பாதிக்கப்படும் தமது இயல்பு வாழ்வை சீரமைத்துக்கொள்ள முயற்சிக்கும் சங்கானை கிழக்கு J/ 178 தானாவோடை கிராமத்தின் வெள்ள நீர் தேங்கலால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக்காண பொறிமுறை ஒன்றை வகுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுப்பது அவசியம்.

குறிப்பாக J/178 சங்கானை கிழக்கு, தானாவோடை கிராமத்தில் தற்போது நிரந்தர காணிகளை கொண்டு வாழும் மக்கள் 1990களில் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து நீதவான் முகாமில் தற்காலிகமாக வாழ்ந்த மக்களாகவே இருக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் சுமார் 85 குடும்பங்களை கொண்ட இந்த மக்கள் தற்போது சங்கானை முருகமூர்த்தி கோயில் அருகாமையில் உள்ள விவசாயக் காணிகளை தமது சொந்த முயற்சியில் கொள்வனவு செய்து தமக்கான நிரந்தர வாழ்வியலை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மக்கள் தற்போது தமது வாழிடமாக குடியேறியுள்ள காணிகள் விவசாயக் காணிகளாக இருப்பதனால் வருடா வருடம் பெய்யும் மழை நீரால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்த மக்களுக்கு வருடா வருடம் அனர்த்த உதவித் திட்டங்கள் வழங்க வேண்டிய நிலையும் அரசு மற்றும் தனியாருக்கு ஏற்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் நீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவகையில் வடிகால் ஒன்று உருவாக்கப்பட்டு வழுக்கையாற்றுடன் சங்கமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போதும் அதனூடாக செல்லும் மழை நீர் முழுமையாக கடலை சென்றடைவதற்கான பொறிமுறையை கொண்டதாக அந்த வாய்க்கால் இல்லாமையே மழை நீர் மக்கள் வாழிடத்தில் நிரம்பி இந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்க காரணமாக இருக்கின்றது.

மக்களின் வாழ்வியலை முதன்மைப்படுத்தும் சபையாக எமது சபையின் செயற்பாடுகள் இருப்பதனால் இந்த மக்களின் வாழ்வியல் நலன்களை கருத்திற்கொண்டு வந்து சேரும் மழை நீரை வழிந்தோடச் செய்வதற்காக வடக்கின் பெரிய ஆறு எனக் கூறப்படும் வழுக்கையாற்றின் எல்லைவரை நீடிக்கப்பட்டுள்ள இப்பகுதியூடாகச் செல்லும் வாய்க்காலை தூர்வாரி, ஆழப்படுத்தி அதன் இரு பகுதிகளையும் வழிந்தோடும் நீரால் பாதிப்புறாத வகையில் நிலையான திட்டமிடலுடன் புனரமைத்து கொடுக்க எமது சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் சார்பாக எனது கோரிக்கை அமைகின்றது.

அந்தவகையில் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள மழைகாலத்திற்கு முன்னர் குறித்த பகுதி மக்களின் இயல்பான வாழ்வியலை கருத்திற்கொண்டு குறித்த வாய்க்காலை சீரமைக்க எமது சபை முதன்மைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கோரிக்கையின் அவசியம் கருதி குறித்த நீர் வாய்க்காலின் தூர்வாரலை துறைசார் ஆலோசனை பெற்று தீர்வுகாண சபை அனுமதி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழு நியமனம்

by selvan
May 21, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஐந்து பேர் கொண்ட தெரிவுக் குழுவிற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில விஜேகுணவர்தன தலைமையில்...

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

by selvan
May 21, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  வருடாந்த மகோற்சவ பெருவிழா  இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இன்றைய தினம் (21) காலை   உற்சவ மூர்த்திகளுக்கு ...

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

தவறான புரிதலால் ஏற்பட்ட சர்ச்சை: 15 வயது சிறுமி விவகாரத்தில் திலும் அமுனுகம மன்னிப்பு கோரல்!

by selvan
May 21, 2026
0

அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது விவகாரம் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்கரிய கருத்துக்கள், அந்த வழக்கோடு தொடர்புடைய 15 வயது சிறுமியை நோக்கமாகக் கொண்டவை அல்ல என...

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

by selvan
May 21, 2026
0

தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சியால் மக்கள் மீது பாரிய சுமை.!

by Mathavi
May 21, 2026
0

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற ரூபாய் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள...

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

அரிசி இறக்குமதிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
May 21, 2026
0

நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, பொன்னி சம்பா மற்றும் பால்பொன்னி உள்ளிட்ட GR11 அரிசி வர்க்கங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி...

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

by Mathavi
May 21, 2026
0

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது....

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி.!

by Mathavi
May 21, 2026
0

இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65 வயதானவர் மீது யானை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சைக்கிளில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.!

by Mathavi
May 21, 2026
0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி