நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி ஆகும்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. கூலி திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகின்றது.
இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் படமாக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டது.
ஏற்கனவே, சிக்கிடு, மோனிகா பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கூலி படத்தின் 3 ஆவது பாடலான ‘பவர் ஹவுஸ்’ இன்று மாலை வெளியாகிறது.
இப்பாடலிற்காக இரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ‘பவர் ஹவுஸ்’ பாடல் இன்று இரவு 9.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடக்கும் அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படுவதாக வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.









