• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாணவர்களின் வளமான வாழ்க்கைக்கு துணை நின்றவர் என்ற பெருமையினை அதிபர், ஆசிரியர்கள் பெற வேண்டும்.!

Mathavi by Mathavi
July 16, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
மாணவர்களின் வளமான வாழ்க்கைக்கு துணை நின்றவர் என்ற பெருமையினை அதிபர், ஆசிரியர்கள் பெற வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

உற்பத்தித் திறன் செயற்பாட்டின் மூலமாகவும் “மாணவர்களின் வளமான ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு துணைநின்றவர் என்ற பெருமையினை அதிபர் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்பதே எனது எதிர்பார்ப்பு என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் (2025/26) – பாடசாலைப் பிரிவுப் போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் அளவுகோல்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (15.07.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அரசாங்க அவர்கள், உற்பத்தித்திறன் சார்ந்த போட்டி மற்றும் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது எனவும், பாடசாலைகளில் உற்பத்தித் திறன் செயற்பாட்டின் மூலம் அடைவு மட்டங்களை அறிந்துகொள்வதுடன், முன்னேற்றமான பாதையில் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டதுடன், இச் செயலமர்வுக்கு ஆர்வத்துடன் பங்கேற்றமைக்காக தமது பாராட்டுக்களை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவித்து பின்வரும் கருத்துக்களையும் முன்வைத்தார்.

1.பாடசாலைகளின் கட்டமைப்பில் முன்னரைவிட மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், உற்பத்தித் திறன் செயற்பாட்டிற்கு தலைமைத்துவத்தின் பங்கும், அனைவரும் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பும் அவசியம் எனத் தெரிவித்து, பாடசாலைகளில் அவர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைக்கூறுகளை நேர்த்தியாக செய்வதன் ஊடாக இலக்குகளை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.

2.சில பாடசாலைகளில் மாணவர்கள் விபரங்கள் கணினி மயப்படுத்தியதன் மூலம் விபரங்கள் இலகுபடுத்தியுள்ளமை தம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டதுடன், ஆசிரியர்களின் நேரசூசி கூட கணினி மயப்படுத்தி நிர்வாக நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

3.பாடசாலைகளில் திண்மக் கழிவு முகாமைத்துவம் அவசியம் எனவும் மாணவர்களுக்கு அதனை முறையாக பழக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

4.பாடசாலைகளில் ரம்மியமான – இயற்கையான சூழல் இருத்தல் வேண்டும் என்பதுடன் வகுப்பறைகள், அலுவலகங்களின் சூழலும் மற்றும் வெளிச்சூழலும் அழகாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனால் மாணவர்களின் அகச் சூழலில் நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

5.நேர முகாமைத்துவத்தின் அவசியத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனால் பல முன்னேற்றகரமான மாற்றங்களை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

6.உற்பத்தித் திறன் செயற்பாட்டை மாணவர்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தி வழிப்படுத்த வேண்டும் எனவும், இதன் ஊடாக மாணவர்கள் சமூகத்திலும் உற்பத்தித் திறன் செயற்பாட்டை எடுத்துச் செல்வார்கள் எனவும், இதனால் சமூகமும் நாடும் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்து அனைவரினதும் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டு கொண்டார்.

இச் செயலமர்வில் தேசிய உற்பத்தி செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. திலானி சுகந்திகா லியனகே அவர்களால் உற்பத்தித் திறன் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது.

இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திருமதி உ. சி. அனுஷியா, தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

by Bharathy
May 16, 2026
0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

by Mathavi
May 15, 2026
0

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 15, 2026
0

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

by Mathavi
May 15, 2026
0

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி