• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மனிதப் புதைகுழி விவகாரம்; அநுரவிற்கு டக்ளஸ் அவசர கடிதம்..!

Thamil by Thamil
July 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
மனிதப் புதைகுழி விவகாரம்; அநுரவிற்கு டக்ளஸ் அவசர கடிதம்..!
Share on FacebookShare on Twitter

செம்மணியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுகளில் மனித எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், எக்காரணம் கொண்டும் புதைகுழி அகழ்வுகள் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், கிளீன் ஸ்ரீலங்காவின் ஆட்சியில் ஈ.பி.டி.பி. தூய்மையான கட்சி என்பது நிரூபணமாகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகளில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் அகழப்பட்டு வருகின்றன.

எமது பிரதேசத்தில் யுத்தம் நிலவிய காலத்தில் பல்வேறு மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இதில் பல்வேறு தரப்புக்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களும் இருக்கின்றன.

இவை தொடர்பாக கடந்த காலங்களில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் யார் என்பது வெளிக்கொண்டு வரப்படாத நிலையில், செம்மணியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின் அகழ்வுப் பணிகளும், அங்கு மீட்கப்படுகின்ற மனித எச்சங்களும், புதைகுழி விவகாரத்தினை மீண்டும் பேசுபொருளாக மாற்றி இருக்கின்றது

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் எமது மக்களிடையே நிலவுகின்ற குழப்ப நிலையை மேலும் தூண்டிவிடுவதாக சில சுய இலாப அரசியல் சக்திகளின் கருத்துகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.

எனவே, மேற்படி விடயம் தொடர்பில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

செம்மணி மாத்திரமல்ல, மன்னார், கொக்குளாய், துணுக்காய், மண்டை தீவு என்று எங்கெல்லாம் மனிதப் புதைகுழிகள் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித எச்சங்கள் மீட்கப்படுமாயின் அவை எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டு சம்ந்தப்பட்டவர்கள் யார் என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீதர் தியேட்டரில் கூட மனிதப் புதைகுழிகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகளை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு புதைகுழி விவகாரத்துடன் ஈ.பி.டி.பி.யை தொடர்புபடுத்த விரும்புகின்றவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம்.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், மண்டைதீவிலே புதைகுழிகள் இருப்பதாகவும், அது தொடர்பாக எமது செயலாளர் நாயகத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த, நீதி அமைச்சர், வெறுமனே செவி வழிச் செய்திகளை வைத்து கதை சொல்லுவதை விடுத்து, ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் விசாரிக்கிறோம் என்று சொல்லி இருக்கின்றார்.

எனவே ஸ்ரீதர் தியேட்டரில் புதைகுழி இருக்கின்றது, ஈ.பி.டி.பி. மக்களை கொலை செய்து புதைத்தது என சமூக ஊடகங்களில் கருத்துக்களை பரவ விடுகின்றவர்கள் உரிய முறையிலே முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். அதனை ஈ.பி.டி.பி. ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.

கிளீன் ஸ்ரீலங்கா என்ற மகுட வாக்கியத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி. கிளீனான அரசியல் கட்சி என்று வெளிப்படுத்தப்படும், எம் மீது அரசியல் நோக்கங்களுக்காக பூசப்பட்டு வருகின்ற அனைத்து சேறுகளும் கழுவப்படும் என்று நம்புகின்றோம்.

அந்த அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எமது செயலாளர் நாயகத்தினால் இரண்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு கடித்ததில் ஏற்கனவே கூறியது போன்று, புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இன்னுெமொரு கடிதத்தில், கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட தொழிர்சார் பாதிப்புக்களை குறைக்கும் நோக்கில் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்ற மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றுக்கு லீற்றர் ஒன்றிற்கு 25 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.

அந்தத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பதால், அவ்வாறான ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகின்றோம் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Posts

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை பரிதாபமாக பலி!

by Bharathy
May 16, 2026
0

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே...

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி.!

by Mathavi
May 15, 2026
0

தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி - 2026 நடைபெறவுள்ளது. காலம் : 28.07.2026இடம் : சிவகாமி...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 15, 2026
0

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!

by Mathavi
May 15, 2026
0

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

by Mathavi
May 15, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

by Mathavi
May 15, 2026
0

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

by Mathavi
May 15, 2026
0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!

by Mathavi
May 15, 2026
0

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 15, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

by Mathavi
May 15, 2026
0

நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி