மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சேமிப்புப் பணத்தை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு பலமுறை சிந்திக்க வேண்டும். வேலையில் கவனத்தோடு இருக்க வேண்டும். நண்பர்கள் தானே என்று நம்பி எந்த ஒரு ரகசியமும் வெளியில் சொல்லாதீங்க. பிறகு உங்களுக்கே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சின்னச் சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்காக பயந்து விட வேண்டாம். எல்லா வேலையும் நல்லபடியாக நடக்கும். ஒரு முறை முயற்சி செய்து காரியத்தை சாதிக்க முடியவில்லை என்றால், பலமுறை அந்த காரியத்தை முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். இன்று விடா முயற்சி தான் உங்களுக்கு தேவைப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, தூக்கம் இருக்கும். எல்லா வேலையும் அந்தந்த நேரத்தில் சரியாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவு இலாபம் இருக்காது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சிந்தித்து செயல்படுவீர்கள். பக்குவம் வெளிப்படும் நாள். சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட அடுத்தவர்களைப் பற்றி யோசிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதிற்கு இன்று நிம்மதி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு அதிகமாக இருக்கும். உங்களுக்கு பிரச்சினை என்று வரும்போது, சொந்த பந்தங்களும் நண்பர்களும் சேர்ந்து கை கொடுப்பார்கள். நீங்கள் யாரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தீர்களோ, அவர்கள் கூட உங்களோடு வந்து ஒன்று சேர நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. எதிரிகளும் இந்த நாளில் நண்பர்களாக மாறுவார்கள். நன்மைகள் நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கும். காதல் கை கூடலாம், திருமணப் பேச்சு நல்லபடியாக முடியும். நீண்ட நாள் நீதிமன்ற வழக்குகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். சொத்து சுகம் கைக்கு வந்து சேர வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலைமை சீராகும். உற்சாகத்தோடு சந்தோஷத்தோடு இந்த நாளை கொண்டாடி மகிழலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். தடைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் கடன் வசூல் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நீண்ட நாள் கழித்து சில உறவுகளை சந்திப்பீர்கள். மனதிற்கு இதமாக இருக்கும். வேலையில் வியாபாரத்திலும் நிதானம் தேவை. பொறுமை இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும். செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. எந்த வேலையையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனத்தோடு இருக்கக் கூடாது. முக்கியமான வேலைக்கு தயாராக வேண்டும் என்றால், 1/2 மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சில பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது நபர் பேச்சை கேட்காதீர்கள். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் தலையிடாதீங்க. தேவையற்ற சிக்கல்களில், உங்களை சில பேர் சிக்க விடவும் வாய்ப்புகள் உள்ளது. இன்று நீங்கள் ஏமாளியாக இருக்கக் கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுபச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.


