1827
இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர் நீதிமன்றங்களில் சான்றாயர்களாக அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
1985
திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1859
சுவீடன் – நோர்வே மன்னராக பதினைந்தாம் சார்லசு முடி சூடினார்.
1876
தென் கரொலைனாவில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்.
1879
அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. இது 1881 இல் மூழ்கியது.
1892
நியூபவுண்லாந்தின் சென் ஜோன்சு நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1932
டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு பெரும் பொருளியல் வீழ்ச்சியின் மிகத் தாழ்ந்த புள்ளிகளை (41.22) எட்டியது.
1937
துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் தெகுரானில் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. இவ் உடன்பாடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது.
1939
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஒத்துழைப்போடு அரிசனங்களின் ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.
1947
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்று நியூ மெக்சிகோவில் வீழ்ந்ததாக செய்தி அறிவிக்கப்பட்டது.
1962
ரங்கூனில் மாணவர் கிளர்ச்சியை அடக்க இராணுவத் தளபதி நே வின் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டடத்தைத் தகர்த்தார்.
1966
புருண்டியின் மன்னர் நான்காம் முவாம்புத்சா அவரது மகன் இளவரசர் சார்லசு இந்தீசியினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1972
பாலத்தீன எழுத்தாளர் கசன் கனஃபானி இஸ்ரேலிய மொசாட் படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.
1982
ஈராக் ஜனாதிபதி சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1988
பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1990
ஜேர்மனி அர்கெந்தீனாவை வென்று காற்பந்து உலகக் கோப்பையை வென்றது.
1994
கிம் – இல் – சுங் இறந்ததை அடுத்து, அவரது மகன் கிம் ஜொங் – இல் வட கொரியாவின் உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
2003
சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர். இரண்டு வயது குழந்தை ஒன்று மட்டும் உயிர் தப்பியது.
2006
ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
2011
அட்லாண்டிசு விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.
2014
பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை : இஸ்ரேல் காசா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.















