மஸ்கெலியா பிரதேச சபைக்கு சுயேட்சை குழு பந்து சின்னத்தில் போட்டியிட்ட கந்தையா இராஜ்குமார் முதல்வராக இன்று காலை 9.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நிகழ்வில் தவிசாளர் பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு பௌத்த மத தேரர், மஸ்கெலியா சண்முக நாதர் ஆலய குரு, பள்ளிவாசல் மத மௌலவி, சென் ஜோசப் தேவாலய குரு ஆகியோரின் மத அனுஸ்டிப்பிற்கு பின்னர் கௌரவ முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் பந்து சின்னத்தில் போட்டியிட்ட கந்தையா இராஜ்குமார் மஸ்கெலியா பிரதேச சபைக்கு இன்று காலை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதி முதல்வராக ஜக்கிய மக்கள் சக்தியின் புரவுன்லோ வட்டாரத்தில் அதிக கூடிய வாக்குகள் பெற்ற லெட்சுமணன் ராஜ் அசோக் இன்று மஸ்கெலியா பிரதேச சபை காரியாலயத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நிகழ்வில் முன்னாள் தவிசாளர் கணபதி நகுலேஸ்வரன் அம்பகமுவ பிரதேச சபை தவிசாளர் மற்றும் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் திரு.விஸ்வநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஸ்கெலியா நோட்டன் வீதியில் உள்ள அக்ஷயா விருந்தினர் விடுதியில் திரு.கந்தையா இராஜ்குமார் தலைமையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.



