செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. அந்த படத்தில் குஸ்தி வீராங்கனையாக வரும் ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பு பாராட்டப்பட்டது.
பல பெண்கள் மட்டுமல்ல, பல ஆண்களும் அவர் நடிப்பை புகழ்ந்தனர். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷாலே படத்தை தயாரித்ததால், அடுத்த பாகம் எப்போது என்று பலரும் கேட்டனர்.
இந்நிலையில் இப்போது ‘கட்டா குஸ்தி 2’ உருவாகிறது என்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிவிட்டது.
ஆனாலும், இப்போது சில படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு ‘கட்டா குஸ்தி 2’வுக்கு செல்ல பல மாதங்கள் ஆகும். படம் வெளியாக இன்னும் அதிக காலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
அதே இயக்குனர் என்றாலும், ‘கட்டா குஸ்தி 2’விலும் ஐஸ்வர்ய லட்சுமி ஹீரோயினாக தொடர்வாரா? வேறு ஹீரோயினாக என்ற சந்தேகமும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கட்டா குஸ்தி விஷயத்தில் அந்த மாற்றம் வராது என்று கூறப்படுகிறது.