”டிஜிட்டல் இந்தியா திட்டம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கி, வாய்ப்பை ஜனநாயகப்படுத்தியது. அது தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறி விட்டது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஜூலை 1ல், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்த நிலையில் இத்திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
கடந்த 2014 வரை, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான இந்தியர்களின் திறன்கள் மீது சந்தேகம் இருந்தது.இந்த அணுகுமுறையை பா.ஜ., அரசு மாற்றியது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குடிமக்கள் மீது நம்பிக்கை வைத்து, 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கி, வாய்ப்பை ஜனநாயகப்படுத்தியது. அது தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறி விட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.