அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் உலங்கூர்தி ஒன்று பண மழை பொழிந்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அண்மையில் காலமான உள்ளூர் கார் கழுவும் (car wash) உரிமையாளரான தோமஸ் என்பவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நடைப்பெற்றதாக கூறப்படுகின்றது.
5,000 டொலர்கள் என ஒரு தகவலும் 50,000 டொலர்கள் வரை கொட்டப்பட்டதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.
காலமாகிய தோமஸ் என்பவர் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பிறகு திரும்ப அவர்களுக்கே செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார் எனவும் அதனால் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

