பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராக, அசார் மஹ்முத் (Azhar Mahmood) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அசார் மஹ்முத் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, குறித்த பதவியினை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தம் நிறைவடையும் வரை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.