நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹெட்டியாராச்சி தலைமையில் இன்று பகல் (01) தபால் நிலையத்துக்கு முன்பாக பரிசுத்த திரித்துவ கல்லூரி மற்றும் புனித சவேரியார் கல்லூரி, மகளீர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் நல்ல ஆயர் மகளீர் வித்தியாலய மாணவர்களுக்கும் மது மற்றும் மது ஒழிப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹெட்டியாராச்சி மது பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து விபரமாக மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார்.
இறுதியில் விழிப்புணர்வு வீதி நாடகமாக பதாகைகள் ஏந்தி நுவரெலியா நகரில் உள்ள பல வீதிகள் வழியாக மாணவ, மாணவிகள் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.




