திருகோணமலை விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போது எம்பெருமான் விசேட பூசை ஆராதனைகளுடன் பத்தர்கள் புடைசூழ தேருக்கு அழைத்து வரப்படுவதையும், ஆண்களும் பெண்களும் எம்பெருமானினுடைய தேரின் வடத்தினை பிடித்து இழுப்பதையும், சிறுமிகளின் நடன நிகழ்வுகளையும் காணக் கூடியதாக இருந்தது.


