யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தனியான நிதிப்பிரிவு ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி Y.திவாகர் தலைமையில் இன்று 01/07/2025 காலை 11:30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டன.
மங்கள சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும் வடக்கு மாகாண பிரதம செயலாளருமான தனுஜா முருகேசன், வடக்கு மாகாண பிரதம நிதிப்பிரிவு பிரதி செயலாளர் திரு.எஸ் குகதாஸ், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி P.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் V.P.S.D பத்திரண யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் S.சிறிபாஸ்கரன், உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து நிதிப்பிரிவு அலுவலகம் சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி நிகழ்வின் பிரதம விருந்தினரால் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து வரவேற்புரை, தலைமை உரைகளை தொடர்ந்து கருத்துக்களை நிகழ்வின் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், உட்பட பலரும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், பரிசாரகர்கள் உட்பட பணியாட்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


