இந்தியா – தெலுங்கானாவில், இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.
2ஆவது நாளாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தொழிற்சாலையிலுள்ள உலை ஒன்று வெடித்ததினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த மாநில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.