கஹவத்த, யாயின்ன பகுதியில் நேற்று திங்கட்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞன் காயமடைந்துள்ளார்.
கஹவத்த, யாயின்ன, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு சென்ற நான்கு பேர், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் சன நடமாட்டமற்ற பகுதிக்கு கடத்திச் சென்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 27 வயதுடைய மற்றைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.