மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தலைமையில் இன்று 1 ம் திகதி காலை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மஸ்கெலியா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களும் போதைப்பொருள் சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு மஸ்கெலியா பொது விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து விபரமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இறுதியில் பதாகைகள் ஏந்தி மஸ்கெலியா நகரில் உள்ள பல வீதிகள் வழியாக மாணவ, மாணவிகள் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.