மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகும் ‘தலைவன் தலைவி’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று வெளியாகும் என பிரத்யேக காணொளி மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவன் தலைவி’ எனும் திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான சமையல் கலை நிபுணரின் வாழ்வியலை விவரிக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் -அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் வழங்குகிறார்.
இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.