முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானார் எனத் தெரியவந்துள்ளது.
அன்னார் தனது 82 ஆம் வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கங்கள் பலவற்றில் காமினி லொகுகே முக்கிய பதவிகள் பலவற்றை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.