• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டுப் போட்டி..!

Thamil by Thamil
June 30, 2025
in இலங்கை செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0
வடகிழக்கு தழுவிய ரீதியில் சிறப்புற இடம்பெற்ற மாபெரும் கிளித்தட்டுப் போட்டி..!
Share on FacebookShare on Twitter

வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் பெருமையுடன் நடாத்திய வடக்கு கிழக்கு இணைந்த வணங்காமண் வெற்றிக் கிண்ணம் 2025 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிளித்தட்டு போட்டியானது நேற்றைய தினம் (29.06.2025) சிறப்புற இடம்பெற்றிருந்தது.

வணங்காமண் மறுவாழ்வுக் கழகத்தால் நடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிக் கிண்ண கிளித்தட்டு சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியானது 06.06.2025 அன்று அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் இறுதிப் போட்டியானது கரடிபிலவு, பழம்பாசி, ஒட்டுசுட்டான் பகுதி கதிரவன் விளையாட்டு மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.

அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கும் நோக்கோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அணிகளை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தது.

ஆரம்பப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்குபற்றி அதில் இருந்து மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களில் குறித்த கிளித்தட்டு போட்டியானது ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் இடம்பெற்று, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படும் அணிகள் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தது.

இறுதிப் போட்டியில் யாழ் மாவட்ட ஏ அணியும் , கிளிநொச்சி மாவட்ட ஆதவன் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருந்தனர். விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் 4: 3 என்ற ரீதியில் 4 பழங்களை எடுத்து யாழ் அணியினர் வெற்றியைத் தமதாக்கி கொண்டனர். அத்தோடு யாழ் மாவட்ட பி அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

குறித்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 50,000 ரூபா பணப் பரிசும் , மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 30,000 ரூபா பணப் பரிசும் , வெற்றி பெற்ற அணிகளுக்கான பிரமாண்ட வெற்றிக்கேடயமும், அனைத்து வீரர்களுக்குமான வெற்றிப் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

மாலை நிகழ்வாக தமிழர் பாரம்பரியக் கலை நிகழ்வுகளாக சிவலீமன் தற்காப்புக் கலை மன்ற மாணவர்கள் வீரதீர தற்காப்புக் கலைகளாகிய சிலம்பம், சுருள்வாள், தீப்பந்தம், வாள், கேடயம் போன்ற கலைகளை பாபு மாஸ்டரின் தலைமையில் நடாத்தப்பட்டிருந்தது.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்குடன் கற்றல் உபகரணங்களும், துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிஷாந்தன், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்களான கெ.சுதர்சன், தனஞ்சயன் சிறப்பு விருந்தினர்களாக நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரன், கொக்குளாய் அ.த.க பாடசாலை அதிபர் ஆர்.பாஸ்கரன் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

நல்லூரானை தரிசித்த சபாநாயகர்..!

by Thamil
July 18, 2025
0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன இன்றைய தினம் (18) வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர்...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

by Thamil
July 18, 2025
0

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் ஒருங்கமைப்பிலும், வெளி விவகார வெளிநாட்டு...

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

வவுனியா வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது..!

by Thamil
July 18, 2025
0

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11...

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு..!

by Thamil
July 18, 2025
0

மன்னாரில் வறுமைக் கோட்டிற்கு உள்ளான பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்திற்கு மக்கள் நல்வாழ்வு மையத்தினால் அமைக்கப்பட்ட வீடு இன்று (18) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு பயனாளியிடம்...

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பம்..!

by Thamil
July 18, 2025
0

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிகள் மோதும் 14 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்டத்...

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

வத்திராயனில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு..!

by Thamil
July 18, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில்...

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

மிகச் சிறப்பாக இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா..!

by Thamil
July 18, 2025
0

வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று...

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

யாழ். பல்கலையில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு..!

by Thamil
July 18, 2025
0

தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (18) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. நாளைய தினம் (19) இடம்பெற உள்ள இசை நிகழ்வில்...

வடக்கு மனிதப் புதைகுழிகள் பற்றி விரைவில் உண்மைகள் வெளிவரும்..!

வடக்கு மனிதப் புதைகுழிகள் பற்றி விரைவில் உண்மைகள் வெளிவரும்..!

by Thamil
July 18, 2025
0

"வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "செம்மணி...

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்..!

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்..!

by Thamil
July 18, 2025
0

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிஸார் இன்று (18) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஐஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி