ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களின் உதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரினார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றாக நிராகரித்துள்ளது.
“இது முற்றிலும் போலியான தகவலாகும். ஆளுங் கட்சியால் திட்டமிட்ட அடிப்படையில் பரப்படும் வதந்தியாகும்” என்று மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.