ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்றுகூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று (30) ஹங்குரன்கெத்த பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளைப் பெற்று பிரதி தவிசாளரானார்.
மேலும் ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜயசேகர முதியன்சேலாகே அராவே கெதர லயனல் குணரத்ன அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவிக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் ராமையா ருசன்ஸ்குமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். இதில் இ.தொ.கா வேட்பாளர் ராமையா ருசன்ஸ்குமார் 22 வாக்குகளைப் பெற்று பிரதி தவிசாளர் ஆனதுடன், ஐ.ம.ச வேட்பாளர் 20 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
மொத்தமாக ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்காக 42 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உறுப்பினர் பங்கீடு விபரம் பின்வருமாறு…
•தேசிய மக்கள் சக்தி – 20
•இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
•ஐக்கிய தேசிய கட்சி – 03
•பொதுஜன ஐக்கிய முன்னனி – 01
•ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 04
•ஐக்கிய மக்கள் சக்தி – 09
•சர்வஜன அதிகாரம் – 01
•சுயாதீனக்குழு 1 – 01
•சுயாதீனக்குழு 2 – 01