கல்முனை Bahriyan’s 2002 O/L Batch அமைப்பினால் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களின் அடைவு மட்டத்தை விருத்தி செய்வதற்கான செயலமர்வுகள், விஷேட வகுப்புக்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நிதியுடன், கடந்த கால வினாப்பத்திரப் பொதியை பெற்றுக் கொள்வதற்கான நிதி என்பன இன்று (30) காலை ஆராதனை நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்களான SN. ஹஸ்மி, SL. நாசிக் ஆகியோரால் அதிபர் M. நவாஸ் செளபி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் காலை ஆராதனைக் கூட்டத்தில் Bahriyan’S 2002 ( O/L) Batch அமைப்பிற்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றியும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.




