மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்திலுள்ள கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் சுகயீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 14 மாணவர்கள் மேலதிக சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையால் உணவு ஒப்பந்தக்காரர் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்களில் 22 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பப் பிரிவில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களில் 22 பேருக்கு வாந்திபேதி , வயிற்றுவலி என்பன ஏற்பட்டதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.
மேலும் உணவு ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.


