அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 4 நாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.
ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு உதாரவும் நான்கு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை ஏ அணியின் தலைவராக பசிந்து சூரியபண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக ஜுலை 4, 6, 9ஆம் திகதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஏ அணி விளையாடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூலை 13 முதல் 16ஆம் திகதிவரை முதலாவது நான்கு நாள் போட்டியும், ஜூலை 20 முதல் 23ஆம் திகதிவரை 2ஆவது நான்கு நாள் போட்டியும் நடைபெறும்.
சகல போட்டிகளும் டார்வின் விளையாட்டரங்கில் நடைபெறும்.
