தீவகம் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தீவகம் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
உப தவிசாளராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவானார்.
நெடுந்தீவு பிரதேச சபையானது 13 உறுப்பினர்களைக் கொண்ட பிரதேச சபையாகும். தமிழரசுக் கட்சி சார்பில் 06 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 04 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 02 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 01 உறுப்பினரும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இன்றைய தெரிவிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.சுகிர்தன், கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



