உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் AFC மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் F குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது.
தக்ஷென்ட், பனியொத்கோர் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற போட்டியில் இலங்கையை 10 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் உஸ்பெகிஸ்தான் மிக இலகுவாக வெற்றிகொண்டது.
உஸ்பெகிஸ்தான் அணியானது இடைவேளைக்கு முன்னர் 5 கோல்களையும் இடைவெளைக்குப் பின்னர் 5 கோல்களையும் போட்டு அபார வெற்றியீட்டியது.
இலங்கை தனது இரண்டாவது போட்டியில் நேபாளத்தை புதன்கிழமை 2ஆம் திகதி எதிர்த்தாட்டவுள்ளதுடன், கடைசிப் போட்டியில் லாஓஸை ஜூலை 5ஆம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.