சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் 7 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சூடானில் தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் இதேபோன்ற சம்பவங்களில் 2023ம் ஆண்டு 14 சுரங்கத் தொழிலாளர்களும், 2021ம் ஆண்டு 38 சுரங்க தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.