வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி காலை 6.30 மணிக்கு பயணிக்கும் வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தின் அளவு சிறியதாக உள்ளதால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என வவுனியா மாநகர சபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களுக்கு பொதுமக்களால் முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
இதனை கருத்திற்கொண்ட துணை முதல்வர் வவுனியா சாலை முகாமையாளருடன் கலந்துரையாடிய போது இன்றைய தினம் முதல் பெரிய பேருந்தை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்த பெரிய பேருந்து முல்லைத்தீவு நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.
இதன்போது வவுனியா இ.போ.ச சாலை முகாமையாளர் M.V.M ரலீம் அவர்கள் மற்றும் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களும் பிரசன்னம் தந்திருந்ததுடன் பயணிக்களால் கெளரவிப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




