புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர்கள் பிரதி தவிசாளர்கள் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் புதிய காழி நீதிவான் ஆகியோரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கிண்ணியா ஜமியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் உலமா சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (2025.06.29) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
உலமா சபைத் தலைவர் கலாநிதி நஸார் பலாஹி அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமா சபையின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பைத்துல் ஸகாத், பைத்துல் மால், நிர்வாகிகள் கலாநிதி ஏ.எஸ் மஹ்ரூப், மற்றும் அதிபர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள் கௌரவ காழி நீதிவான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதோடு ஒவ்வொருவரினதும் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாகவும், அனைவரும் இணைந்து தொழிற்படுவதால் கிடைக்கும் நன்மைகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.






