நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை பகுதியில் நேற்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து நுவரெலியா வழியாக பண்டாரவலை நோக்கி பிரதான வீதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த மகிழுந்து திடீரென்று வீதியைவிட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

