இன்றைய தினம்(28.06.2025) பூனாகலை கபரகல தோட்டப் பிரதேசத்தில் இயற்கை அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கட்டுமானப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வுகளில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் K.V. சமந்த வித்யாரத்ன, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோழர் கிட்னன் செல்வராஜ் , தோழி அம்பிகா சாமுவேல், தோழர் ரவீந்திர பண்டார உட்பட அமைச்சின் இணைப்பு செயலாளர்கலான சிவநேசன், வசந்தமூர்த்தி ஆகியோர்களுடன் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


