அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் இதனை வெளியிட்டுள்ள்ளார்
அவர் வெளியிட்ட செய்தியில், “பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகின்றது கனடா. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகின்றோம்.
அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாட்களுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம்” என பதிவிட்டுள்ளார்.