மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த உந்துருளி மற்றும் மகிழுந்துடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் தாங்கி மோதியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் உந்துருளியும் பாரிய சேதத்திற்கு உள்ளானது.
40 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பயணித்த குறித்த எரிபொருள் தாங்கி சம்பவ இடத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருந்தால் மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஒரு அனர்த்தம் ஏற்பட்டிருக்கும்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் எரிபொருள் தாங்கியை அவ்விடத்தில் இருந்து அகற்றியதுடன் ஏற்பட்ட விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Related Posts
கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் ஆரம்பம்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கமைய ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள் பொதுச் சந்தைகள்...
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த...
அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!
அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள...
பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி
நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்...
ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!
இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த...
மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று...
மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!
எமக்கான நிலம் கிடைக்கப்பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு - கிழக்கிலே...
தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!
தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ...
மரை இறைச்சியுடன் இருவர் கைது.!
பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர். பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை...
மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய...










