தேசிய சுற்றாடல் வாரத்தினை சிறப்பிக்கும் வகையிலும் முடிவுறுத்தப்படாத நிலையில் இருந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் என்ற வகையிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் இன்று பாடசாலைக்கு கிடைக்கின்ற சக்தி வலுவின் அம்சங்களான குடிநீர் மற்றும் மின்சக்தியை சிக்கனமாக பாவித்தல் தொடர்பான சுவரொட்டிகளை தயாரித்ததுடன் பேரணி மூலமாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் செயற்பாடும் இன்று (24) மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
வித்தியாலயத்தில் உள்ள 15 வகுப்பு பொறுப்பாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு பெற்றோர் பங்களிப்பை வழங்கியிருந்ததுடன் பாடசாலை அதிபர் ஷல்மானுல் ஹரீஸ் ஆலோசனையின் கீழ் இத்திட்டம் நடைபெற்றது.
சவாலான உலகில் வெற்றி கொள்ளத் தேவையான ஆளுமைப் பண்புகளை வளர்த்தெடுத்தல், பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் மறைக் கலைத் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டன.
இச் செயற்பாட்டில் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.













