நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் பமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இதற்கு அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.
படத்தின் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படம் எதிர்வரும் ஜூலை 10 வெளியாக இருக்கின்றது.