இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இஸ்ரேல் அரசு ஈரான் மக்கள் மீதான தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி காலை 4 மணிக்கு முன் நிறுத்தினால், அதற்கு பிறகு எங்கள் பதிலடி நடவடிக்கைகளை தொடர விருப்பமில்லை,” என்று குறிப்பிட்டார்.
தற்போதுவரை யுத்த நிறுத்தம் தொடர்பிலோ மோதல் நிறுத்தம் தொடர்பிலோ எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவித்தலுக்கு பின், ஈரானிடமிருந்து வரும் முதல் அதிகாரப்பூர்வ கருத்தாக அமைந்துள்ளது.